×

நேபாளப் பிரதமராக பிரசந்தா இன்று மாலை பதவி ஏற்பு: பிரதமராகப் போகும் பிரசந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காத்மாண்டு: நேபாளப் பிரதமராக சிபிஎன் மாவோயிஸ்ட் சென்டர் தலைவர் புஷ்ப கமல் தகால் என்ற பிரசந்தா இன்று மாலை பதிவியேற்கிறார். அண்டை நாடானா நேபாளத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல்நடைபெற்றது. 275 உறுப்பினர்களை தேர்தெடுக்க நடத்தப்பட்ட தேர்தலில் பிரதமர் சேர்பகதூர் தியூபா தலைமையிலான நேபாள காங்கிரஸ் கட்சி 89 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சி ஆதரவுடன் புதிய அரசை அமைப்பதற்காக முயற்சிகளில் சேர்பகதூர் தியூபா களமிறங்கினார். இதனால், முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையில்  கூட்டணி கட்சியுடன் பேச்சு நடத்தினார். அப்போது முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு பிரதமராக இருக்க ஆதரவளிக்குமாறு தியூபாவிடம் பிரசந்தா கேட்டு கொண்டார். தியூபா அதனை ஏற்காததால் புதிய அரசை அமைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து கே.பி.சர்மா ஒளி தலைமையிலான எதிர்கட்சியுடன் பிரசந்தா நடத்திய ஆலோசனையில் சுமூக முடிவு காணப்பட்டது. இருவரும் இரண்டரை ஆண்டுகள் அடிப்படையில் அரசாங்கத்தை வழிநடத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல் வாய்ப்பை பிரசந்தாவுக்கு சர்மா ஒளி விட்டு கொடுத்ததை அடுத்து அவரை இன்று மாலை 4 மணிக்கு பதவியேற்க உள்ளார். 3-வது முறையாக பிரதமராகும் பிரசந்தாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.     …

The post நேபாளப் பிரதமராக பிரசந்தா இன்று மாலை பதவி ஏற்பு: பிரதமராகப் போகும் பிரசந்தாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Prasanda ,Nepal ,PM ,Modi ,Kathmandu ,CBN Maoist Centre ,Pushpa Kamal Takal ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...